அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப,
விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும், என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன்
தெரிவித்தார்.வி.ஏ.ஓ பணியிடங்கள் - 800, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப் - 2
ஏ பணியிடங்கள் - 1,700, குரூப் - 4' பணியிடங்கள் - 2,800 இதில் அடங்கும்.
அரசின் பல்வேறு
துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வுகள்
அறிவிக்கப்படும், என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான -
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.வி.ஏ.ஓ பணியிடங்கள்
- 800, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப் - 2
ஏ
பணியிடங்கள் - 1,700, குரூப் - 4' பணியிடங்கள் - 2,800 இதில் அடங்கும்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில், 213 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான,
எழுத்துத்தேர்வு நடந்தது.சென்னையில், 28 மையங்கள் உட்பட, எட்டு
மாவட்டங்களில், 91 மையங்களில், 27 ஆயிரத்து, 552 பேர் தேர்வு
எழுதினர்.சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை,
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், தேர்வுக்
கட்டுப்பாட்டுஅதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.பின், பாலசுப்ரமணியன்
கூறியதாவது:உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கீ ஆன்சர்' ஒரு வாரத்தில்
வெளியிடப்படும்; இரு மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும். வி.ஏ.ஓ., - 800;
நேர்முகத்தேர்வு இல்லாத, 'குரூப் - 2 ஏ' பணியிடங்கள் - 1,700; 'குரூப் -
4' பணியிடங்கள் - 2,800 என, 5,300காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு
அறிவிக்கப்படும்.சமீபத்தில், 4.78 லட்சம் பேர் எழுதிய, குரூப் - 2 தேர்வு
முடிவு, இம்மாத இறுதியில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
TNPSC டிஜிட்டல் திட்டம் ரெடி | டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில்,
விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை
தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில்,
விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை
தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது. தமிழக அரசு துறைகளில்
காலியாகும் இடங்களுக்கு, தமிழக அரசின் பணி நியமன
அமைப்பான,
டி.என்.பி.எஸ்.சி., மூலம் போட்டித்தேர்வு நடத்தி, ஆட்கள்
நியமிக்கப்படுகின்றனர்.கடந்த 2013 - 14ல், 79 வகையான பதவிகளுக்கு, 16
ஒருங்கிணைந்த தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி., நடத்தியுள்ளது. அவற்றில்,
14,600 காலியிடங்களுக்கு, 41 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்;
பெரும்பாலான முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
சில தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும்,
இடஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு, வழக்கு தொடர்வதும் தொடர்கதையாக உள்ளது.
தேர்வு முடிவு தாமதத்தை தவிர்த்தல்; வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்தல்;
இடஒதுக்கீட்டு முறையில் தெளிவான நிலை போன்றவற்றுக்காக, டி.என்.பி.எஸ்.சி.,
புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அதற்காக, புதிய கணினி மென்பொருள்
உருவாக்கப்பட்டு உள்ளது. விடைகளை கணினி வழியே எளிதாக, விரைவாக, தெளிவாக
திருத்துதல் மற்றும் 50க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளுக்கு, இடஒதுக்கீட்டை
முறையாக வழங்க இந்த மென்பொருள் உதவும். இந்த திட்டம், இன்னும் ஒரு
மாதத்தில் அமலாக்கப்படுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல்
திட்டத்தின் மூலம், இடஒதுக்கீடு குளறுபடியின்றி, தேர்வு முடிவுகளும்,
இறுதித்தேர்வும் தாமதமின்றி அறிவிக்கப்படும் என,
டி.என்.பி.எஸ்.சி.,வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத
விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில்
பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள
இடங்களை
நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு நடத்துகிறது. புதிய
நடைமுறைதேர்வு முறைகளில் உள்ள குறைகளை தீர்க்க, டி.என்.பி.எஸ்.சி.,யில்
புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.அதன்படி, தேர்வுக் கட்டண சலுகை,
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வருக்கான தகவல்கள் அனுப்புதல் போன்ற
வற்றை எளிமைப்படுத்த, சுயவிவர பதிவுக்கான, நிரந்தர, 'ஆன் - லைன்' பதிவு
முறை, நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,
தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின் போட்டித்
தேர்வு எழுதுவோருக்கு, 'ஆன் - லைனில்' நிரந்தரப்பதிவு முறை - ஒன் டைம்
ரிஜிஸ்ட்ரேஷன் இதுவரை கட்டாயமில்லை. ஆனால், இன்று முதல் இந்தப் பதிவு
கட்டாயம் ஆக்கப்படுகிறது. அதற்கான சுயவிவர பக்கம், 'ஆன் - லைனில்'
வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர் எப்போது வேண்டுமானாலும், நிரந்தர பதிவில்
தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். தேர்வு அறிவிக்கப்படும்போது, சுயவிவர
பக்கத்தில், தங்கள் சான்றிதழ் விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய
வேண்டும்.சுயவிவர பக்கத்தின் மூலம், இனி தேர்வர்களுக்கு, 'யூசர்'
எனப்படும், பயன்படுத்துனர் ஐ.டி., வழங்கப்பட்டு, 'பாஸ்வேர்ட்' எனப்படும்
ரகசிய திறப்பு எண்ணும் தரப்படும். சட்ட நடவடிக்கை தேர்வர் தங்களுடைய
விவரங்களை இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தேர்வுக்
கட்டணம் செலுத்திய பின், அது டி.என்.பி.எஸ்.சி.,யிடம் சேர்ந்து விட்டதா,
எத்தனை முறை கட்டண சலுகை பயன்படுத்தப்பட்டு உள்ளது, பதிவேற்றம் செய்து உள்ள
சான்றிதழ்கள் எவை போன்ற விவரங்களை, தேர்வரும், டி.என்.பி.எஸ்.சி.,யும்
எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். தேர்வர்கள் தவறான தகவல்கள்
மற்றும் புகைப்படங்களை பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவர் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேர்வு எழுத தடை விதிக்கப்படும். விரைந்து
வெளியிட...நிரந்தரப் பதிவு செய்தாலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியது
அவசியம். விண்ணப்பத்தில் உள்ள தகவல்களே, தேர்வு பரிசீலனைக்கு
எடுக்கப்படும். நிரந்தர பதிவிலுள்ள சான்றிதழ் மற்றும் விவரங்கள் மூலம்,
இரண்டும் சரிபார்க்கப்படும். இந்த திட்டத்தால், வருங்காலத்தில், சான்றிதழ்
சரிபார்ப்புக்கு தேர்வர்களை நேரில் வரவழைக்க தேவையில்லை. தேர்வு முடிவையும்
விரைந்து வெளியிட முடியும். தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை, 1800 425
1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.tnpscexams.net/ என்ற இணைய
தள முகவரியிலும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.